Saturday, April 28, 2012

பிரிவு - தனிமை




அன்பு  காதலி!
வெப் காமிராவில்
உர்ரென்று உன்னையே பார்த்துக்கொண்டிருந்த
வேளையில்
அழகாய் உதட்டை சுழிக்கிறாய்!
எப்படி முடிகிறது உன்னால்?
ஒரு நொடியில் உன் காதல் மொத்தமும்
என் மேல் ஓர் அருவியாய் கொட்டிவிட?



என் தனிமையில் வீட்டின் அறைகளில்
மல்லிகை வாசனையும், கொலுசு சத்தமும்! - பயமில்லை
எனக்குத்தெரியும்
அவை எனக்காய் நீ விட்டுசென்றவைகள் என்று!



நீ விட்டுச்சென்ற கைக்குட்டையை 
துவைத்து உலர வைக்கும் போதுதான்
கவனித்தேன்,
போனது அழுக்கு மட்டும் தான்!
உன் வாசனை இன்னும்
அதிக  சுகந்தமாய்!



இப்போதெல்லாம் துவைத்த என் ஆடைகள்
உலர மறுக்கின்றன.
அருகில் உன் ஆடைகள் இல்லாததால்
அவற்றிற்கு கூட
குளிர் ஜூரம்!



 கட்டிலில் உனக்காய்
இடை வெளி விட்டு
படுத்துக்கொள்கிறேன்,
கனவில் நீ வந்து என்னுடன்  படுத்துக்கொவாய்
என்பதால்.



ஒருநாள் வாங்கிவந்த
வாழைத்தண்டை நான் ஜூஸ் போடவே இல்லை,
வளையல்கள் அணியாத உன்
கரங்கள் போலவே 
இருந்ததால்.



அடிக்கடி உன் புகைப்பட ஆல்பத்தை 
திறந்து பார்கிறேன்,
உன் உருவத்தில் இருக்கும்
உன் வாசனையை நுகர,
எவன் சொன்னான் - உயிர் வாழ ஆக்சிஜன் வேண்டும் என்று?



எல்லா விளக்கையும் அணைத்து விட்டு
ஒற்றை மெழுகுவர்த்தி ஏற்றி
உற்று நோக்கினேன் - ஊகூம்
உன்னை விட அது ஒன்றும் பெரிய அழகு இல்லை!



அடுப்பில் வைத்த பால் பொங்கி வழிந்து ஓடியதை
நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்,
துயில் கலைந்து
போர்வைக்குள் இருந்து
எட்டிப்பார்க்கும் உன் முகம் போலவே இருந்ததால்!



முற்றிய போதும் அறுக்க மனம் வரவில்லை,
பச்சை மிளகுச்செடிகளின் மத்தியில்
இருக்கும் அந்த ஒற்றை சிவப்புக் கீரையை,
ஏனோ பார்க்கும் போது உன்னை உணர்த்துவதால்.

ஆடையில்லா மனிதன் அரை மனிதனாம்! 
நான் அதைவிட சிறியவனாகிப்போனேன்,
அகமுடையவள் உன் அருகின்மையால்!
 
----   ராவண பிரபு
 

நீ என்ற என் தேவதை...






கோபம் வரும்போது எதையாவது
எடுத்து எறியும் என்னால்
எப்போதுமே எறிய முடிவதில்லை,
என் மனதில் உள்ள
உன் நினைவுகளையும்,
தேவதை உன் உருவத்தையும்!

தேநீரில் சர்க்கரை இட
மறந்ததற்கு வருத்தம்
கொள்கிறாய்
ஏன்?
நீ ஒரு வாய் குடித்து விட்டு
 
கொடுத்தால்
போதாதா?


சாயம் இல்லாமலேயே
சிவந்த
உன் உதடுகள்
இன்னும் சிவப்பாகின்றன,
நீ திருட்டுத் தனமாய்
என்னைப் பார்த்து புன்னகை
சிந்தும் போது!

நம் காதல் மலரில்
சிறிது காமத்தின் கள்;
காற்று உன் மாராப்பை
விலக்கியது!!!
----- ராவண பிரபு
 

Monday, April 27, 2009

காதலி

என் காதலிக்கு

ஆயிரம் வாசனைகள்
என்னை கடந்து சென்றாலும்
முதன் முதலாய் என்
முகத்தில் உரசிய
உன் கூந்தல் வாசம் --- மறக்க முடியவில்லை.

இயேசு பிரான்
தோள் சிலுவை போல
இறங்காமல்
என் இதயத்தில் உன்
நினைவுகள் ----- மறக்க முடியவில்லை

அறுசுவை உணவு
புசித்த போதும்
அன்றொருநாள்
நீ ஊட்டிய
தயிர் சாதம் சுவை -------------- மறக்க முடியவில்லை.

பொழுதுகள் பல
காலத்தால் கடந்து
வந்த பின்னும்
முதல் முத்தம் பெற்ற
மார்கழி மாத
மாலை பொழுது ------------மறக்க முடியவில்லை.

ராகங்கள் தாளங்கள்
பாடல்கள் பல மாற்றி
கேட்ட போதும்
என் இதயத்தில் நீ பாடிய
இஸ்தாரின் பாடல் ----- மறக்க முடியவில்லை.

உன் விழிகளால்
காற்றில் கோலமிட்டு
என் பார்வைக்கு அனுப்பினாய்.
நான் பொய்யாய்
புறக்கணிக்க
நிஜமாய் உன் கோபம்
என்னால்
அதை --------------- மறக்க முடியவில்லை.

என் வீட்டு சமயலறையில்
உரிமையாய் நுழைந்து
ரகசியமாய்
எனக்கு போட்டு
குடுத்த காப்பி
நான் பாதி நீ மீதி
குடித்தது---------- மறக்கமுடியவில்லை

யாருமில்லா
ஓர் மாலை பொழுதில்
நானே பறித்து , கட்டி உனக்கு
வைத்து விட்ட
மல்லிகை சரம் ------- மறக்க முடியவில்லை.

என் புகைப்பட ஆல்பத்தில்
நான் மட்டுமே இருந்த
என் தனி புகைப்படங்கள்
திடீரென திருடு போய்
உன் ஜாக்கெட்டுக்குள்
தஞ்சம் புகுந்தது --------மறக்க முடியவில்லை.


நான் முத்தம் கேட்டு
நீ கொடுக்காமல்
பின்னொருநாள்
தனிமையில்
என் உதட்டு சிகெரெட்டை
பிடுங்கி எறிந்து
கோபத்துடன் நீ கொடுத்த
அந்த அழுத்தமான முத்தம் -------மறக்க முடியவில்லை.



நான் காய்ச்சலால்
படுத்த போது
நீயும் சாப்பிடாமல்
வெறும் பிரட் சாப்பிட்டு
பின் உனக்கும் காய்ச்சல் வந்து
என்னிடம்
திட்டு வாங்கினாயே -------------- மறக்க முடியவில்லை.

நான்கு வருடம் கழித்து
நான் ஊருக்கு வந்த போது
ஓர் ஓரமாய் நின்று
பார்வையால் நலம் விசாரித்து
பறக்கும் முத்தம் கொடுத்தாயே ------ மறக்க முடியவில்லை.

முதன் முதலாய்
நான் உனக்கு புடவை
வாங்கி கொடுத்து
ரகசியமாய்
நீ அதை எனக்கு மட்டும்
உடுத்தி காட்டினாயே ---- மறக்க முடியவில்லை.

எல்லா பண்டிகையின்
போதும் யாருக்கும்
தெரியாமல்
உன் கையால் எனக்கு
சர்க்கரை பொங்கல்
ஊட்டி விடுவாயே --- மறக்க முடியவில்லை.

நண்பர்களுடன் சேர்ந்து
தண்ணி போட்டு வந்து
உன் கையால் முதுகில் அடி
வாங்கியது --மறக்க முடியவில்லை.

என் வீட்டில் எல்லோரும்
வெளியூர் போய் விட
நீ சமைத்து
பெரிய கேரியரில்
எடுத்து வந்து
தூக்கம் கலைத்து
ஊட்டி விட்டாயே ---மறக்க முடியவில்லை.

என் கவிதைகளை
படித்து விட்டு
எவளுக்காக எழுதினாய்
என்று என் கன்னம்
திருகிவிட்டு
அதை எடுத்து சென்று
தினமும் படித்து முத்தமிட்டாயே ----- மறக்க முடியவில்லை.

நீ எனக்காய் நிறைய செய்வாய்.
நானும் கூட .
இருந்தாலும்
எனக்காய் நீயும்
உனக்காய் நானும்
சண்டை போட்டு
கொள்வோமே
அங்கு தான் நம் காதல்
அவ்வப்போது
நிறைவு பெற்று கொள்கிறது.

Thursday, November 6, 2008

கடவுளும் கார்த்திகேயனும் -01

கடவுளும் கார்த்திகேயனும் -01

கடவுள் அன்பானவர்.

கடவுள் கருணை உள்ளவர் - சிறு வயதில் படித்தது.


தமிழ் நாட்டில் எல்லா கிராமங்களில் இருக்கும் படித்த இளைஞர்களை போலவே கார்த்திகேயனும் ஊரை விட்டு நகரத்தில் தஞ்சம் புகுந்தவன். காரணம் ஒன்றும் பெரிய பில் கேட்ஸ் மாதிரி ஆக வேண்டும் என்ற லட்சியம் எல்லாம் இல்லை. ஒரு வேலை, கொஞ்சம் சம்பாத்யம், முக்கியமாக 6 மணி நேர தூக்கம். அதுவும் காலையில் 4 முதல் 6 வரை நிம்மதியாக தூங்க வேண்டும். கார்த்திகேயனுக்கு சொந்த ஊர் தமிழ்நாட்டின் தென்கோடி மாவட்டம். வீட்டின் வலது பக்கம் ஒரு சர்ச்சும் வலது இடது பக்கம் ஒரு கோயிலும் பூர்வஜென்ம புண்ய கரும வினைகளால் அமைந்திருந்தது. கடைசியாக பார்த்த ஜேம்ஸ் பாண்ட் பட கதாநாயகிஉடன் கரீபியன் கடலில் உல்லாச படகில் ( கனவில் தான்) சென்று கொண்டிருந்த போது "சாமியே சரணம்" மற்றும் "ஏசுவே ரட்சியும் " என்ற இரு கடவுளர்களின் பள்ளியெழுச்சி பாடல்கள் ஒலிபெருக்கி மூலம் வெடிக்க, கனவு கலைந்து, உறக்கம் கலைந்து சூறாவளியில் அடிபட்ட சுண்டெலியாய் குளிரில் நடுங்கிக்கொண்டே எழுவான் கார்த்திகேயன். எழுந்த உடன் ஒரு டீ போட்டு கொடுத்து விடுவாள் அம்மா. "காலையில படிச்சா தாண்டே மண்டையில நல்லா ஏறும்" இது அப்பா. மணி 4 ஆகி இருக்கும். அந்த நேரத்தில் துயில் எழுவது சர்வ வல்லமை பொருந்திய கடவுளுக்கு சாத்தியமே தவிர, இருட்டில் மூத்திரம் அடிக்கவே பயப்படும் கார்த்திகேயனுக்கு இது பெரும் கலவரமான ஒன்றாகவே இருந்து வந்தது. மேலும் அவனுக்கு காலையில் படித்தால் ஒரு எழவும் புரியாது என்பதும், மற்றும் காலையில் நான்கு மணிக்கு எழுவதால் அந்த நாள் முழுவதும் ஒல்டுமாங்கை ஓவராக குடித்து போல நாராசமாய் இருக்கும் என்பது யாரிடமும் சொல்ல முடியாமல் இருந்து வந்தது.

கார்த்திகேயனுக்கு சத்தம் சுத்தமாக பிடிக்காது. ஆனால் அவன் ஊரில் ஊளையிடுவது போல சத்தமாக பேசினால் தான் ஆம்பளை என்று மதிப்பார்கள். அப்புறம் இந்த சொந்தகார மாமி, பெரியம்மா, சித்தி போன்ற பாசமலர்களிடம் மாட்டினால் அவ்வளவுதான், காது கிழியும் வரை கீச்சி பாசத்தை கொட்டிவிடுவார்கள்.

இன்னும் சில அட்வான்ஸ்டு மாமிகள் உண்டு. கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பார்கள் (சின்ன பசங்களுக்கு தான்). காலையிலேயே பழைய சோற்றையும் மீன் கறியும் சாப்பிட்டு , பாண்ட்ஸ் பவுடரும் போட்டு வந்து முத்தம் கொடுத்தால் எப்படி இருக்கும்?. வாந்தி வராத குறை தான்! இதில் வெற்றிலை போட்ட கிழவிகள் அட்டகாசம் வேறு. இதற்கு பயந்தே கார்த்திகேயன் ஊரில் எந்த விசேஷமானாலும் போக மாட்டான். இப்போதும் அப்படித்தான். விடுமுறை விட்டால் கூட ஊருக்கு போவதில்லை. அந்த நாற்றத்திற்கு நம்ம டாஸ்மாக் ஓல்டு மங்கு நாற்றமே பரவாயில்லை என்பான். ஒரு வழியாக தன் 26 வயதில் ஊரை விட்டு வந்து சிட்டியில் செட்டிலான கார்த்திகேயன் இப்போதும் கோயில் கடவுள் என்றால் அலறுவான். காரணம் அடுத்த பதிவில் சொல்கிறேன்.

ராவணபிரபு.

Wednesday, November 5, 2008

தமிழ் வளர்ப்போம் வாங்க !!!!!

படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்கவும்!

Tuesday, November 4, 2008

Lets Start........

A Controversial Note :-

I’m sure you can imagine

As plain as can be

The place is Picadilly

The players He and She.

She Whispered “Will it hurt me?”

“Of course not” answered he

“It is a very simple process,

You can rely on me.”

She said “I’m very frightened,

I’ve not had this before.

My friend has had it five times

And said it can be sore.”

Then finally contened

Lay back and relax a bit

Quickly and readily he bent over her

And then he started it.

It was growing rather painful

Tears formed in her eyes

It was hurting quite a bit now

It must have been quite a size.

“Calm yourself” he whispered

His face was filled with a grin

“Try and open a bit wider

So I can get it in.”

“It’s coming now” he whispered

“I know” she cried in bliss

Feeling it deep within her now

She said “I am glad I am having this.”

And with a final effort

She gave a frightened shout

He gripped it in anguish

And quickly pulled it out.

She lay back quite contened

Sighed and gave a smile

I am glad “I came now

You made it worth my while.”

(Now if you read this carefully

The dentist you will find

Is not what you imagined

It’s just your dirty mind).